Ignorance 41

401

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்

Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.

அறிவு நிரம்புவதற்குக்‌ காரணமான நூல்களைக்‌ கற்காமல்‌ கற்றவரிடம்‌ சென்று பேசுதல்‌, சூதாடும்‌ அரங்கு இழைக்காமல்‌ வட்டுக்காயை உருட்டி ஆடினாற்‌ போன்றது.

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on aboard) without squares.

பரிமேலழகர் உரை அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும்; நிரம்பிய நூல்இன்றி கோட்டி கோளல்தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.
விளக்கம்:
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை "கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக், கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்" (நற். 3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். "புல்லா எழுத்தின் பொருள்இல் வறுங்கோட்டி" (நாலடி. 155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.)
மணக்குடவர் உரை கல்லாமையாவது கல்வியில்லாமையால் உளதாகுங் குற்றங் கூறுதல். மேற் கல்வி வேண்டுமென்றார் அஃதிலாதார்க்கு உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்குக் கூறியதாதலான், அதன்பின் இது கூறப்பட்டது. ரங்கு - சூது ; வட்டாடுதல் - உண்டை யுருட்டல்; கோட்டி கொளல் - "புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி'' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின், அது தப்பு மென்றது.
402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

Like those who doat on hoyden’s undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.

(கற்றவரின்‌ அவையில்‌) கல்லாதவன்‌ ஒன்றைச்‌ சொல்ல விரும்புதல்‌, முலை இரண்டும்‌ இல்லாதவள்‌ பெண்‌ தன்மையை விரும்பினாற்‌ போன்றது.

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (theenjoyment of ) woman-hood.

பரிமேலழகர் உரை கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதவன் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.
விளக்கம்:
("இனைத்தென அறிந்த சினை" (தொல். சொல். 33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதான் என்பதாம். அவாவியவழிக் கடைப்போகாது; போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையும் மில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும்,
(என்றவாறு). இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.
403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!

கற்றவரின்‌ முன்னிலையில்‌ ஒன்றையும்‌ சொல்லாமல்‌ அமைதியாக இருக்கப்பெற்றால்‌, கல்லாதவர்களும்‌ மிகவும்‌ நல்லவரே ஆவர்‌.

The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

பரிமேலழகர் உரை கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதாரும் மிக நல்லராவர்; கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.
விளக்கம்:
(உம்மை . இழிவுச் சிறப்பு உம்மை; தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்னும், கூடின் ஆண்டுத் தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனி நல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லராவர் : கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்,
(என்றவாறு). சொல்லாதொழிய அறி வாரில்லை பாவர் என்றவாறாயிற்று. இது கல்லா தார்க்கு உபாயம் இது வென்றது.
404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்

From blockheads’ lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால்‌ மிக நன்றாக இருந்தாலும்‌ அறிவுடையோர்‌ அதனை அறிவின்‌ பகுதியாக ஏற்றுக்‌ கொள்ளமாட்டார்‌.

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept fortrue knowledge.

பரிமேலழகர் உரை கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.
விளக்கம்:
(ஒண்மை: அறிவுடைமை. அது நன்றாகாது, ஆயிற்றாயினும், ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற தூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும், அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்,
(என்றவாறு). ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியா ராயினும் மதிக்கப்படாரென்றது.
405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.

கல்லாத ஒருவன்‌ தன்னைத்‌ தான்‌ மதித்துக்‌ கொள்ளும்‌ மதிப்பு (கற்றவரிடம்‌) கூடிப்‌ பேசும்போது அப்பேச்சினால்‌ கெடும்‌.

The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (ofthelearned).

பரிமேலழகர் உரை கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் 'யான் அறிவுடையேன்' எனத் தன்னை மதிக்கும் மதிப்பு; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.
விளக்கம்:
('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது, சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி யுரையாட மறை யும்,
(என்றவாறு). இது பெருமையுடையாராயினும் மதிக்கப் படாரென்றது.
406

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்

‘They are’: so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!

கல்லாதவர்‌ உயிரோடிருக்கின்றனர்‌ என்று சொல்லப்‌ படும்‌ அளவினரே அல்லாமல்‌, ஒன்றும்‌ விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்‌.

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

பரிமேலழகர் உரை கல்லாதவர் - கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையார் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.
விளக்கம்:
(களர் தானும் பேணற்பாடு அழிந்து, உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத், தாமும் நன்று மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர்,
(என்றவாறு). இது பிறர்க்குப் பயன்படாரென்றது.
407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty’s vain pretence.

நுட்பமானதாய்‌ மாட்சியுடையதாய்‌ ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால்‌ சிறப்பாகப்‌ புனையப்பட்ட பாவை போன்றது.

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisiteworks, is like (the beauty and goodness) of a painted earthen doll.

பரிமேலழகர் உரை நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்; மண், மாண் புனை பாவை அற்று - சுவையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.
விளக்கம்:
(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும் மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். "உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது'' (சீவக. முத்தி. 154) ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவு இல்வழிச் சிறப்பில் என்பதாம். இதனால் அவர் வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.) --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வி யில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக் கும்,
(என்றவாறு). இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.
408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு

To men unlearned, from fortune’s favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.

கல்லாதவரிடம்‌ சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம்‌ உள்ள வறுமையைவிட மிகத்‌ துன்பம்‌ செய்வதாகும்‌.

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon thelearned.

பரிமேலழகர் உரை நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது; கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.
விளக்கம்:
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றி மாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திருகல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப், பிறர்க்கு இன்னாமை யைச் செய்யும்; கல்லாதார் மாட்டு உண்டாகிய செல்வம்,
(என்றவாறு). இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது.
409

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு

Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning’s grace.

கல்லாதவர்‌ உயர்ந்த குடியில்‌ பிறந்தவராக இருப்பினும்‌ தாழ்ந்த குடியில்‌ பிறந்திருந்தும்‌ கல்வி கற்றவரைப்‌ போன்ற பெருமை இல்லாதவரே.

The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they mayhave been born in a low caste.

பரிமேலழகர் உரை கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்; கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்துவைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
விளக்கம்:
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும், உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர்,
(என்றவாறு) இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்

Learning’s irradiating grace who gain,
Others excel, as men the bestial train.

அறிவு விளங்குவதற்குக்‌ காரணமான நூல்களைக்‌ கற்றவரோடு கல்லாதவர்‌, மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்‌.

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebratedworks.

பரிமேலழகர் உரை விலங்கொடு மக்கள்அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர், இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.
விளக்கம்:
(இலங்கு நூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பார் பயன் எய்தாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர் ; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், (எ - று ) இது கல்லாதார் விலங்கென்றது.


transliteration

arangkinri vattaati yatrrae nirampiya
noolinrik koatti kolal

kallaathaan sotrkaa muruthal mulaiyirandum
illaathaal paenkaamutr ratrru

kallaa thavarum naninallar katrraarmun
sollaa thirukkap paerin

kallaathaan otpam kaliyanan raayinum
kollaar arivutai yaar

kallaa oruvan thakaimai thalaippaeithu
sollaadach chorvu padum

ularaennum maaththiraiyar allaal payavaak
kalaranaiyar kallaa thavar

nunmaan nulaipulam illaan yelilnalam
manmaan punaipaavai yatrru

nallaarkan patda varumaiyin innaathae
kallaarkan patda thiru

maetrpirandhthaa raayinum kallaathaar keelppirandhthum
katrraar anaiththilar paadu

vilangkodu makkal anaiyar ilangkunool
katrraaroadu yaenai yavar