குறள் 404

கல்லாமை

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்

kallaathaan otpam kaliyanan raayinum
kollaar arivutai yaar


Shuddhananda Bharati

Non

The unread's wit though excellent
Is not valued by the savant.


GU Pope

Ignorance

From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept fortrue knowledge.


Mu. Varadarajan

கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால்‌ மிக நன்றாக இருந்தாலும்‌ அறிவுடையோர்‌ அதனை அறிவின்‌ பகுதியாக ஏற்றுக்‌ கொள்ளமாட்டார்‌.


Parimelalagar

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.
விளக்கம்:
(ஒண்மை: அறிவுடைமை. அது நன்றாகாது, ஆயிற்றாயினும், ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற தூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும், அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்,
(என்றவாறு). ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியா ராயினும் மதிக்கப்படாரென்றது.