குறள் 403

கல்லாமை

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

kallaa thavarum naninallar katrraarmun
sollaa thirukkap paerin


Shuddhananda Bharati

Non

Ev'n unread men are good and wise
If before the wise, they hold their peace.


GU Pope

Ignorance

The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!

The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.


Mu. Varadarajan

கற்றவரின்‌ முன்னிலையில்‌ ஒன்றையும்‌ சொல்லாமல்‌ அமைதியாக இருக்கப்பெற்றால்‌, கல்லாதவர்களும்‌ மிகவும்‌ நல்லவரே ஆவர்‌.


Parimelalagar

கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதாரும் மிக நல்லராவர்; கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.
விளக்கம்:
(உம்மை . இழிவுச் சிறப்பு உம்மை; தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்னும், கூடின் ஆண்டுத் தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனி நல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லராவர் : கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்,
(என்றவாறு). சொல்லாதொழிய அறி வாரில்லை பாவர் என்றவாறாயிற்று. இது கல்லா தார்க்கு உபாயம் இது வென்றது.