குறள் 402

கல்லாமை

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

kallaathaan sotrkaa muruthal mulaiyirandum
illaathaal paenkaamutr ratrru


Shuddhananda Bharati

Non

Unlearned man aspiring speech
Is breastless lady's love-approach.


GU Pope

Ignorance

Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (theenjoyment of ) woman-hood.


Mu. Varadarajan

(கற்றவரின்‌ அவையில்‌) கல்லாதவன்‌ ஒன்றைச்‌ சொல்ல விரும்புதல்‌, முலை இரண்டும்‌ இல்லாதவள்‌ பெண்‌ தன்மையை விரும்பினாற்‌ போன்றது.


Parimelalagar

கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதவன் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.
விளக்கம்:
("இனைத்தென அறிந்த சினை" (தொல். சொல். 33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதான் என்பதாம். அவாவியவழிக் கடைப்போகாது; போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையும் மில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும்,
(என்றவாறு). இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.