Kural 401
குறள் 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
arangkinri vattaati yatrrae nirampiya
noolinrik koatti kolal
Shuddhananda Bharati
Like play of chess on squareless board
Vain is imperfect loreless word.
GU Pope
Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on aboard) without squares.
Mu. Varadarajan
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.
Parimelalagar
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும்; நிரம்பிய நூல்இன்றி கோட்டி கோளல்தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.
விளக்கம்:
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை "கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக், கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்" (நற். 3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். "புல்லா எழுத்தின் பொருள்இல் வறுங்கோட்டி" (நாலடி. 155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.)
Manakkudavar
கல்லாமையாவது கல்வியில்லாமையால் உளதாகுங் குற்றங் கூறுதல். மேற் கல்வி வேண்டுமென்றார் அஃதிலாதார்க்கு உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்குக் கூறியதாதலான், அதன்பின் இது கூறப்பட்டது. ரங்கு - சூது ; வட்டாடுதல் - உண்டை யுருட்டல்; கோட்டி கொளல் - "புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி'' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின், அது தப்பு மென்றது.