குறள் 400

கல்வி

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

kaetil viluchselvam kalvi yoruvatrku
maadalla matrrai yavai


Shuddhananda Bharati

Education

Learning is wealth none could destroy
Nothing else gives genuine joy.


GU Pope

Learning

Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.

Learning is the true imperishable riches; all other things are not riches.


Mu. Varadarajan

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம்‌ கல்வியே ஆகும்‌; கல்வி தவிர மற்றப்‌ பொருள்கள்‌ (அத்தகைய சிறப்புடைய ) செல்வம்‌ அல்ல.


Parimelalagar

ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி; மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும், முதலாயின செல்வமல்ல.
விளக்கம்:
(அழிவின்மையாவது: தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும், வழிப்பட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை: தக்கார்கண்ணே நிற்றல். மணி, பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி; மற்றவை யெல்லாம் பொருளல்ல,
(என்றவாறு) இது கல்வி அழியாத செல்வமென்றது.