குறள் 405

கல்லாமை

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

kallaa oruvan thakaimai thalaippaeithu
sollaadach chorvu padum


Shuddhananda Bharati

Non

A man untaught when speech he vaunts
Sadly fails before savants.


GU Pope

Ignorance

As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.

The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (ofthelearned).


Mu. Varadarajan

கல்லாத ஒருவன்‌ தன்னைத்‌ தான்‌ மதித்துக்‌ கொள்ளும்‌ மதிப்பு (கற்றவரிடம்‌) கூடிப்‌ பேசும்போது அப்பேச்சினால்‌ கெடும்‌.


Parimelalagar

கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் 'யான் அறிவுடையேன்' எனத் தன்னை மதிக்கும் மதிப்பு; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.
விளக்கம்:
('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது, சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி யுரையாட மறை யும்,
(என்றவாறு). இது பெருமையுடையாராயினும் மதிக்கப் படாரென்றது.