Kural 406
குறள் 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்
ularaennum maaththiraiyar allaal payavaak
kalaranaiyar kallaa thavar
Shuddhananda Bharati
People speak of untaught minds
"They just exist like barren lands".
GU Pope
'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.
Mu. Varadarajan
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்.
Parimelalagar
கல்லாதவர் - கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையார் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.
விளக்கம்:
(களர் தானும் பேணற்பாடு அழிந்து, உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத், தாமும் நன்று மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர்,
(என்றவாறு). இது பிறர்க்குப் பயன்படாரென்றது.