குறள் 408

கல்லாமை

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு

nallaarkan patda varumaiyin innaathae
kallaarkan patda thiru


Shuddhananda Bharati

Non

Wealth in the hand of fools is worse
Than a learned man's empty purse.


GU Pope

Ignorance

To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon thelearned.


Mu. Varadarajan

கல்லாதவரிடம்‌ சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம்‌ உள்ள வறுமையைவிட மிகத்‌ துன்பம்‌ செய்வதாகும்‌.


Parimelalagar

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது; கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.
விளக்கம்:
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றி மாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திருகல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப், பிறர்க்கு இன்னாமை யைச் செய்யும்; கல்லாதார் மாட்டு உண்டாகிய செல்வம்,
(என்றவாறு). இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது.