குறள் 409

கல்லாமை

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு

maetrpirandhthaa raayinum kallaathaar keelppirandhthum
katrraar anaiththilar paadu


Shuddhananda Bharati

Non

Lower are fools of higher birth
Than low-born men of learning's worth.


GU Pope

Ignorance

Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.

The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they mayhave been born in a low caste.


Mu. Varadarajan

கல்லாதவர்‌ உயர்ந்த குடியில்‌ பிறந்தவராக இருப்பினும்‌ தாழ்ந்த குடியில்‌ பிறந்திருந்தும்‌ கல்வி கற்றவரைப்‌ போன்ற பெருமை இல்லாதவரே.


Parimelalagar

கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்; கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்துவைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
விளக்கம்:
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும், உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர்,
(என்றவாறு) இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.