Kural 410
குறள் 410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
vilangkodu makkal anaiyar ilangkunool
katrraaroadu yaenai yavar
Shuddhananda Bharati
Like beasts before men, dunces are
Before scholars of shining lore.
GU Pope
Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train.
As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebratedworks.
Mu. Varadarajan
அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
Parimelalagar
விலங்கொடு மக்கள்அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர், இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.
விளக்கம்:
(இலங்கு நூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பார் பயன் எய்தாமை கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர் ; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், (எ - று ) இது கல்லாதார் விலங்கென்றது.