குறள் 411

கேள்வி

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை

selvaththut selvanj sevichselvam achselvam
selvaththu laellaandh thalai


Shuddhananda Bharati

Listening

Wealth of wealths is listening's wealth
It is the best of wealths on earth.


GU Pope

Hearing

Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.


Mu. Varadarajan

செவியால்‌ கேட்டறியும்‌ செல்வம்‌, செல்வங்களுள்‌ ஒன்றாகப்‌ போற்றப்படும்‌ செல்வமாகும்‌; அச்‌ செல்வம்‌ செல்வங்கள்‌ எல்லாவற்றிலும்‌ தலையானதாகும்‌.


Parimelalagar

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான்.
விளக்கம்:
(செவியான் வரும் செல்வம் - கேள்வியால் - எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)


Manakkudavar

கேள்வியாவது கேள்வியாமாறும் அதனானாகிய பயனும் கூறுதல். நூல்களைக் கற்கமாட்டாதார் அவற்றைக் கற்றார்மாட்டுக் கேட்டலும் அறிவுக்குக் காரணமா . மென்பதனால், அதன்பின் இது கூறப்பட்டது. ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.