Kural 412
குறள் 412
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
sevukkuna villaatha polthu sirithu
vayitrrukkum eeyap padum
Shuddhananda Bharati
Some food for the stomach is brought
When the ear gets no food for thought.
GU Pope
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.
When there is no food for the ear, give a little also to the stomach.
Mu. Varadarajan
செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
Parimelalagar
செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது; வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
விளக்கம்:
(சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித் தேடல் துன்பமே யன்றி நோயும் காமமும் பெருகுதலான் 'சிறிது' என்றும், அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) செவியால் நுகரும் இன்பத்தை யறியாத வாயால் நுகரும் இன் பதையறியும் மாக்கள் செத்தால் வரும் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு ,
(என்றவாறு). இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.