Kural 413
குறள் 413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
seviyunavitr kaelvi yutaiyaar aviyunavin
aanraaroa doppar nilaththu
Shuddhananda Bharati
Whose ears get lots of wisdom-food
Equal gods on oblations fed.
GU Pope
Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share.
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, whoenjoy the food of the sacrifices.
Mu. Varadarajan
செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.
Parimelalagar
விளக்கம்:
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார்; நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரொடு ஒப்பர்.
விளக்கம்:
(செவி உணவு: செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன் சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்' என்றும், துன்பம் அறியாமையான் 'தேவரொடு ஒப்பர்' என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாத போது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும்,
(என்றவாறு). பெருக வுண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாத லான், சிறிது என்றார். இஃது எல்லாக் காலமும் கேட்க வேண்டு மென்றது.