குறள் 414

கேள்வி

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை

katrrila naayinung kaetka akhthoruvatrku
otrkaththin ootrraandh thunai


Shuddhananda Bharati

Listening

Though not learned, hear and heed
That serves a staff and stay in need.


GU Pope

Hearing

Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be tohim a staff in adversity.


Mu. Varadarajan

நூல்களைக்‌ கற்கவில்லையாயினும்‌, கற்றறிந்தவரிடம்‌ கேட்டறிய வேண்டும்‌; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில்‌ தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல்‌ துணையாகும்‌.


Parimelalagar

கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான்.
விளக்கம்:
('உம்மை' கற்க வேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.)


Manakkudavar

(இதன் பொருள்) கற்கமாட்டானாயினுங் கேட்க ; அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக் குத் தாங்குவதொரு துணையாம்,
(என்றவாறு). இது கேள்வி வேண்டுமென்றது.