குறள் 415

கேள்வி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

ilukkal utaiyuli ootrrukkoal atrrae
olukka mutaiyaarvaaich sol


Shuddhananda Bharati

Listening

Virtuous men's wisdom is found
A strong staff on slippery ground.


GU Pope

Hearing

Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways.

The words of the good are like a staff in a slippery place.


Mu. Varadarajan

ஒழுக்கமுடைய சான்றோரின்‌ வாய்ச்சொற்கள்‌, வழுக்கல்‌ உடைய சேற்றுநிலத்தில்‌ ஊன்றுகோல்போல்‌ வாழ்க்கையில்‌ உதவும்‌.


Parimelalagar

இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று - வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற் சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.
விளக்கம்:
(அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் - தளந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய் சொல்' என்றார். 'வாய்' என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்புணர நினறது. 'அவற்றைக் கேட்க' என்பது குறிப்பெச்சம்.)


Manakkudavar

(இதன் பொருள்) வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்; ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்,
(என்றவாறு). இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.