குறள் 416

கேள்வி

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

yenaiththaanum nallavai kaetka anaiththaanum
aanra paerumai tharum


Shuddhananda Bharati

Listening

Lend ear to good words however few
That much will highly exalt you.


GU Pope

Hearing

Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity.

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.


Mu. Varadarajan

எவ்வளவு சிறிதேயாயினும்‌ நல்லவற்றைக்‌ கேட்டறிய வேண்டும்‌; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத்‌ தரும்‌.


Parimelalagar

எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.
விளக்கம்:
('எனைத்து', 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத் துளைபோல வந்து ஈண்டு எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க ; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும், நிரம்பின் பெருமையைத் தரும்,
(என்றவாறு) இஃது எல்லாக் காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்லது கேட்க வேண்டு மென்றது.