The Pleasures of ‘Temporary Variance’ 133

1321

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு

Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.

அவரிடம்‌ தவறு ஒன்றும்‌ இல்லையானாலும்‌, அவரோடு ஊடுதல்‌, அவர்‌ நம்மேல்‌ மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்யவல்லது.

Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make mefeign dislike.

பரிமேலழகர் உரை தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, 'அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர் மாட்டுத்தவறில்லை ஆயினும்; அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்க வற்றாகின்றது.
விளக்கம்:
('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். ''அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற் பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக்கருதி, அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது'' என்பதாம்.)
மணக்குடவர் உரை ஊடலுவகையாவது தலைமகன் மற்றுள்ள நாள்கள் போலன்றி அன்றையிற் புணர்ச்சி பெரியதோ ரின்பமுடைத்தென்று அதற்குக் காரணமாய ஊடலை வியந்து கூறுதலும் அவ்வண்ணமே தலை பகள் கூறுதலுமாம். இது மேலதனோ டியையும். (இதன் பொருள்) அவர் மாட்டுத் தவறில்லையானாலும், அவர் செய்யும் அருள் ஊடு தலைச் செய்ய வற்று,
(என்றவாறு). இது துன்பம் பயப்பதாகிய புல்வியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினா விய தோழிக்குத் தலைமகள் கூறியது.
1322

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்

My ‘anger feigned’ gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.

ஊடுதலால்‌ உண்டாகின்ற சிறிய துன்பம்‌, காதலர்‌ செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக்‌ காரணமாக இருந்தாலும்‌ பெருமை பெறும்‌.

His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by(my) dislike.

பரிமேலழகர் உரை புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, 'அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளிவாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும்.
விளக்கம்:
('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும் 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியின் னும் அழகு உடைத்து,
(என்றவாறு). புணராதொழியினும் இன்ப பாமென்று கூறியவாறு.
1323

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து

Is there a bliss in any world more utterly divine,
Than ‘coyness’ gives, when hearts as earth and water join?

நிலத்தோடு நீர்‌ பொருந்திக்‌ கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில்‌ ஊடுவதைவிட இன்பம்‌ தருகின்ற தேவருலகம்‌ இருக்கின்றதோ?

Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?

பரிமேலழகர் உரை இதுவும் அது. 'நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.
விளக்கம்:
(நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின், அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள். 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடை யார்மாட்டுப் புலத்தல் போல், இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ ? நிலத்தொடு நீரியை தலால் அவை வெப்பமுந்தட்பமுங் கூடியிருக்குமாறு போல், இன்பமுந் துன்பமுங்கூட அனுபவிப்பார்மாட் டென்றவாறு.
1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை

‘Within the anger feigned’ that close love’s tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.

காதலரைத்‌ தழுவிக்‌ கொண்டு விடாமலிருப்பதற்குக்‌ காரணமான ஊடலுள்‌, என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.

பரிமேலழகர் உரை 'அப்புலவி இனி யாதான் நீங்கும்?' என்றாட்குச் சொல்லியது. புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை. - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.
விளக்கம்:
('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் 'படைக்கலம்' என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும். 'படைக்கலம்' என்றாள். அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும்,
(என்றவாறு). அது புணர்ந்த பின்பு தோன்றாமையால், அதனைக் கெடுக்கும் இன்ப முடைத்தென்று கூறியவாறு. படை - பணிமொழி. இவையெட்டும் தலைமகன் கூற்று .
1325

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து

Though free from fault, from loved one’s tender arms
To be estranged a while hath its own special charms.

தவறு இல்லாதபோதும்‌ ஊடலுக்கு ஆளாகித்‌ தாம்‌ விரும்பும்‌ மகளிரின்‌ மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும்‌ போது ஓர்‌ இன்பம்‌ உள்ளது,

Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.

பரிமேலழகர் உரை தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது. தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து.
விளக்கம்:
('உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை' என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். 'ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தாம் தவறிலராயினும், தாம் காதலிக்கப்பட்டாாது மென்றோள் களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து,
(என்றவாறு). இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும், உடலிற்கூடல் நன்றென்றது.
1326

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

‘Tis sweeter to digest your food than ‘tis to eat;
In love, than union’s self is anger feigned more sweet.

உண்பதைவிட முன்‌ உண்ட உணவு செரிப்பது இன்பமானது; அதுபோல்‌ காமத்தில்‌ கூடுவதைவிட ஊடுதல்‌ இன்பமானது.

To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.

பரிமேலழகர் உரை இதுவும் அது. உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.
விளக்கம்:
('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல, அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம்பற்றிக் கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்; அது போல, காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம், (எ-று). பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல், ஊடலினால் கூடல் இன்பந்தரும் என்றவாறு.
1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்

In lovers’ quarrels, ‘tis the one that first gives way,
That in re-union’s joy is seen to win the day.

ஊடலில்‌ தோற்றவரே வெற்றி பெற்றவர்‌ ஆவர்‌; அந்த உண்மை, ஊடல்‌ முடிந்தபின்‌ கூடிமகிழும்‌ நிலையில்‌ காணப்படும்‌.

Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).

பரிமேலழகர் உரை இதுவும் அது. ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும்.
விளக்கம்:
(தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியின் னும் அழகு உடைத்து,
(என்றவாறு). புணராதொழியினும் இன்ப பாமென்று கூறியவாறு.
1328

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு

And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which ‘feigned anger’ lent its piquant grace.

நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில்‌ உளதாகும்‌ இனிமையை, ஊடியிருந்து உணர்வதன்‌ பயனாக இனியும்‌ பெறுவோமாக?

Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?

பரிமேலழகர் உரை இதுவும் அது. நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் சொல்லோ - இன்னும் ஒருகால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ?
விளக்கம்:
(கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றாள். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப்பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?
(என்றவாறு). ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால், பொதுப்படக்கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறு தலரிதென்றது.
1329

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா

Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!

காதலி இன்னும்‌ ஊடுவாளாக; அந்த ஊடலைத்‌ தணிக்கும்‌ பொருட்டு யாம்‌ இரந்து நிற்குமாறு இராக்காலம்‌ இன்னும்‌ நீட்டிப்பதாக.

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!

பரிமேலழகர் உரை இதுவும் அது. ஔ¢ இழை ஊடுக மன் - ஔ¢யிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.
விளக்கம்:
('ஊடுக, நீடுக' என்பன வேண்டிக் கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண் டும் ; யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும்,
(என்றவாறு). இது மனவூக்கத்தின்கண் வந்தது.
1330

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

A ‘feigned aversion’ coy to pleasure gives a zest;
The pleasure’s crowned when breast is clasped to breast.

காமத்திற்கு இன்பம்‌ தருவது ஊடுதல்‌ ஆகும்‌; ஊடல்‌ முடிந்தபின்‌ கூடித்‌ தழுவப்பெற்றால்‌ அந்த ஊடலுக்கு இன்பமாகும்‌.

Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.

பரிமேலழகர் உரை இதுவும் அது. காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமை பற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம்.
விளக்கம்:
(கூடுதல் - ஒத்த அளவினராதல், முதிர்ந்த துனியாய வழித்துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப் பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காமத்திற்கு ஊடுதல் இன்பமாம் ; அதன்பின் கூடிக் கலக்கப் பெற்றால், அதற்கு இன்பமாம்,
(என்றவாறு). இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதே ன்று கூறியது.


transliteration

illai thavaravarkku aayinum ooduthal
vallathu avaralikku maaru

oodalin thonruchiiruthuni nallali vaatinum
vaatinum paadu paerum

pulaththalin puththaelnaadu untoh nilaththodu
neeriyaindh thannaar akaththu

pulli vitaaap pulaviyul thonrumaen
ullam utaikkum patai

thavarilar aayinum thaamveelvaar maennol
akaralin aangkon rutaiththu

unalinum undathu aralinithu kaamam
punarthalin oodal inithu

oodalil thotrravar vaenraar athumannum
koodalitr kaanap padum

ootip paerukuvam kollo nuthalvaeyarppak
koodalil thonriya uppu

ooduka manno oliyilai yaamirappa
needuka manno iraa

ooduthal kaamaththitrku inpam athatrkinpam
kooti muyangkap paerin