குறள் 1330

ஊடலுவகை

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

ooduthal kaamaththitrku inpam athatrkinpam
kooti muyangkap paerin


Shuddhananda Bharati

Sulking charm

Bouderie is lovers' delight
Its delight grows when they unite


GU Pope

The Pleasures of 'Temporary Variance'

A ‘feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.

Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.


Mu. Varadarajan

காமத்திற்கு இன்பம்‌ தருவது ஊடுதல்‌ ஆகும்‌; ஊடல்‌ முடிந்தபின்‌ கூடித்‌ தழுவப்பெற்றால்‌ அந்த ஊடலுக்கு இன்பமாகும்‌.


Parimelalagar

இதுவும் அது. காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமை பற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம்.
விளக்கம்:
(கூடுதல் - ஒத்த அளவினராதல், முதிர்ந்த துனியாய வழித்துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப் பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) காமத்திற்கு ஊடுதல் இன்பமாம் ; அதன்பின் கூடிக் கலக்கப் பெற்றால், அதற்கு இன்பமாம்,
(என்றவாறு). இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதே ன்று கூறியது.