குறள் 1329

ஊடலுவகை

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா

ooduka manno oliyilai yaamirappa
needuka manno iraa


Shuddhananda Bharati

Sulking charm

Sulk on O belle of shining jewels!
Prolong O night! our delight swells!


GU Pope

The Pleasures of 'Temporary Variance'

Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!


Mu. Varadarajan

காதலி இன்னும்‌ ஊடுவாளாக; அந்த ஊடலைத்‌ தணிக்கும்‌ பொருட்டு யாம்‌ இரந்து நிற்குமாறு இராக்காலம்‌ இன்னும்‌ நீட்டிப்பதாக.


Parimelalagar

இதுவும் அது. ஔ¢ இழை ஊடுக மன் - ஔ¢யிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.
விளக்கம்:
('ஊடுக, நீடுக' என்பன வேண்டிக் கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன.)


Manakkudavar

(இதன் பொருள்) விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண் டும் ; யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும்,
(என்றவாறு). இது மனவூக்கத்தின்கண் வந்தது.