குறள் 1327

ஊடலுவகை

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்

oodalil thotrravar vaenraar athumannum
koodalitr kaanap padum


Shuddhananda Bharati

Sulking charm

The yielder wins in lover's pout
Reunited joy brings it out.


GU Pope

The Pleasures of 'Temporary Variance'

In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day.

Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).


Mu. Varadarajan

ஊடலில்‌ தோற்றவரே வெற்றி பெற்றவர்‌ ஆவர்‌; அந்த உண்மை, ஊடல்‌ முடிந்தபின்‌ கூடிமகிழும்‌ நிலையில்‌ காணப்படும்‌.


Parimelalagar

இதுவும் அது. ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும்.
விளக்கம்:
(தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) உடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியின் னும் அழகு உடைத்து,
(என்றவாறு). புணராதொழியினும் இன்ப பாமென்று கூறியவாறு.