குறள் 1326

ஊடலுவகை

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

unalinum undathu aralinithu kaamam
punarthalin oodal inithu


Shuddhananda Bharati

Sulking charm

Sweeter than meal is digestion
And sulk in love than union.


GU Pope

The Pleasures of 'Temporary Variance'

'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.

To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.


Mu. Varadarajan

உண்பதைவிட முன்‌ உண்ட உணவு செரிப்பது இன்பமானது; அதுபோல்‌ காமத்தில்‌ கூடுவதைவிட ஊடுதல்‌ இன்பமானது.


Parimelalagar

இதுவும் அது. உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.
விளக்கம்:
('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல, அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம்பற்றிக் கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்; அது போல, காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம், (எ-று). பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல், ஊடலினால் கூடல் இன்பந்தரும் என்றவாறு.