Kural 1325
குறள் 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து
thavarilar aayinum thaamveelvaar maennol
akaralin aangkon rutaiththu
Shuddhananda Bharati
Though free form faults, one feels the charms
Of feigned release from lover's arms.
GU Pope
The Pleasures of 'Temporary Variance'
Though free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms.
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
Mu. Varadarajan
தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது,
Parimelalagar
தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது. தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து.
விளக்கம்:
('உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை' என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். 'ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) தாம் தவறிலராயினும், தாம் காதலிக்கப்பட்டாாது மென்றோள் களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து,
(என்றவாறு). இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும், உடலிற்கூடல் நன்றென்றது.