குறள் 1322

ஊடலுவகை

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்

oodalin thonruchiiruthuni nallali vaatinum
vaatinum paadu paerum


Shuddhananda Bharati

Sulking charm

Fading first, love blooms and outlives
The petty pricks that pouting gives.


GU Pope

The Pleasures of 'Temporary Variance'

My ‘anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.

His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by(my) dislike.


Mu. Varadarajan

ஊடுதலால்‌ உண்டாகின்ற சிறிய துன்பம்‌, காதலர்‌ செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக்‌ காரணமாக இருந்தாலும்‌ பெருமை பெறும்‌.


Parimelalagar

புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, 'அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளிவாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும்.
விளக்கம்:
('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும் 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) உடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியின் னும் அழகு உடைத்து,
(என்றவாறு). புணராதொழியினும் இன்ப பாமென்று கூறியவாறு.