Acting after due Consideration 47

461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

Expenditure, return, and profit of the deed
In time to come; weigh these- than to the act proceed.

(ஒரு செயலைத்‌ தொடங்குமுன்‌) அதனால்‌ அழிவதையும்‌, அழிந்தபின்‌ ஆவதையும்‌, பின்பு உண்டாகும்‌ ஊதியத்தையும்‌ ஆராய்ந்து செய்ய வேண்டும்‌.

Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be hisultimate gain, and (then, let him) act.

பரிமேலழகர் உரை அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும் ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும்; ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும்; சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க.
விளக்கம்:
[உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல், அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்].
மணக்குடவர் உரை தெரிந்து செயல் வகையாவது வினை செய்யுங்கால் அதனை எண்ணிச் செய்யவேண்டுமென்று கூறுதல். அறிவுடையவனாய்க், குற்றங் கடிந்து, மந்திரி புரோகிதரைத் துணையாகக் கொண்டு, சிற்றினஞ் சோரா தொழுகும் அரசனும் வினை செய்யுங்காலத்து முன்பே எண்ணிச் செய்ய வேண்டுதலின், அவையிற்றின் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும், அது செய்து முடித்தாலுள தாகும் பொருளும், ஆய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினை செய்ய வேண்டும்,
(என்றவாறு).
462

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல

With chosen friends deliberate; next use the private thought;
Then act. By those who thus proceed all works with ease are wrought.

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன்‌ (செயலைப்பற்றி) நன்றாகத்‌ தேர்ந்து, தாமும்‌ எண்ணிப்‌ பார்த்துச்‌ செய்கின்றவர்க்கு அரிய பொருள்‌ ஒன்றும்‌ இல்லை.

There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves,and thoroughly consider (the matter) with chosen friends.

பரிமேலழகர் உரை தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்கவல்ல அரசர்க்கு; அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.
விளக்கம்:
[ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்துபோந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரி களாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து, அதனைச் செய்யும் மாறு எண்ணிச் செய்ய வல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை,
(என்றவாறு).
463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்

To risk one’s all and lose, aiming at added gain,
Is rash affair, from which the wise abstain.

பின்‌ விளையும்‌ ஊதியத்தைக்‌ கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக்‌ காரணமான செயலை அறிவுடையவர்‌ மேற்கொள்ளமாட்டார்‌.

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

பரிமேலழகர் உரை ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக் கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை; அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார்.
விளக்கம்:
['கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர் எச்ச வினை கொண்டது. எச்ச-உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார், 'செய்வினை' என்றார்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்கு ஆக்கம் உண்டாக வேண்டி, முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார், (எ - று.) இது விற்பயவாத வினை செய்யலாகாதென்றது.
464

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்

A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.

இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர்‌ ( இன்ன ஊதியம்‌ பயக்கும்‌ என்னும்‌) தெளிவு இல்லாத செயலைத்‌ தொடங்கமாட்டார்‌.

Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered)and made clear to them.

பரிமேலழகர் உரை தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார்; இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்,
விளக்கம்:
[தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒரு தலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சி மாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்,
(என்றவாறு).
465

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

With plans not well matured to rise against your foe,
Is way to plant him out where he is sure to grow!

செயலின்‌ வகைகளை எல்லாம்‌ முற்ற எண்ணாமல்‌ செய்யத்‌ தொடங்குதல்‌ பகைவரை வளரும்‌ பாத்தியில்‌ நிலைபெறச்‌ செய்வதொரு வழியாகும்‌.

One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without havingthoroughly weighed his ability (to cope with its chances).

பரிமேலழகர் உரை வகை அறச் சூழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல்; பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.
விளக்கம்:
[அத்திறங்களாவன: வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான், முற்றுப் பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும். இழுக்கும் கூறப்பட்டன]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மேற்சொன்ன வகையில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழு தல், பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி,
(என்றவாறு). இது பகைவாக்கு ஆக்க முண்டாமென்றது.
466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

‘Tis ruin if man do an unbefitting thing;
Fit things to leave undone will equal ruin bring.

ஒருவன்‌ செய்யத்தகாத செயல்களைச்‌ செய்வதனால்‌ கெடுவான்‌; செய்யத்தக்க செயல்களைச்‌ செய்யாமல்‌ விடுவதனாலும்‌ கெடுவான்‌.

He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fitto do.

பரிமேலழகர் உரை செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன் வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும்; செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றை செய்யாமை தன்னானும் கெடும். செய்யத்தக்கன அல்லவாவன: பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும், ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை.
விளக்கம்:
(செய்யத் தக்கனவாவன; அவற்றின் மறுதலையாயின. இச் செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும் ; செய்யத் தகு வனவற்றைச் செய்யாமையாலும் கெடும்,
(என்றவாறு). இது மேற்கூறா தனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.
467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

Think, and then dare the deed! Who cry,
‘Deed dared, we’ll think,’ disgraced shall be.

(செய்யத்‌ தகுந்த செயலையும்‌ வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்‌. துணிந்தபின்‌ எண்ணிப்‌ பார்க்கலாம்‌ என்பது குற்றமாகும்‌.

Consider, and then undertake a matter; after having undertaken it, to say “We will consider,” isfolly.

பரிமேலழகர் உரை கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான்.
விளக்கம்:
[துணிவு பற்றி நிகழ்தலின் 'துணிவு' எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'உபாயம்' என்பது அவாய்நிலையான் வந்தது. அது, கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத, தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய, ஏனைய மூவகைய; அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால் விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல் ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு' என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குக என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிகத் துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப் பாமாதலான்,
(என்றவாறு).
468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.

தக்கவழியில்‌ செய்யப்படாத முயற்சி பலர்‌ துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும்‌ குறையாகி விடும்‌.

The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

பரிமேலழகர் உரை ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி; பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.
விளக்கம்:
[முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும்; இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரோடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும்; வேறுபடுத்தலைத் துணைப்படையாளன், தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர் கண்ணும்; ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும்; செய்து, வெல்லுமாற்றான் முயறல், புரைபடுதல்; கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல், உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப் பினும் புரைபடும்,
(என்றவாறு). இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.
469

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

Though well the work be done, yet one mistake is made,
To habitudes of various men when no regard is paid.

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப்‌ பொருந்துமாறு செய்யாவிட்டால்‌ நன்மை செய்வதிலும்‌ தவறு உண்டாகும்‌.

There are failures even in acting well, when it is done without knowing the various dispositions ofmen.

பரிமேலழகர் உரை நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர் மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம்; அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.
விளக்கம்:
[நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மைச் சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதவர்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நன்மையைச் செய்யுமிடத்திலும் குற்றமுண்டாம் ; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து, (எ - று ). இதுவுமோ ரெண்ணம்.
470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு

Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.

தம்‌ நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம்‌ ஏற்றுக்‌ கொள்ளாது. ஆகையால்‌ உலகம்‌ இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்‌…

Let aman reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, ofthings which do not become of his position to adopt.

பரிமேலழகர் உரை தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினை முடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும்; எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.
விளக்கம்:
['தம்' என்பது ஆகு பெயர். தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உ ரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முடியுமாயினும், பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய் தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான், (எ-று) இது பிறராலிகழப்படாதன செய்ய வேண்டு மென்றது.


transliteration

alivathooum aavathooum aaki valipayakkum
oothiyamum koolndhthu seyal

thaerindhtha inaththodu thaerndhthaennich seivaarkku
arumporul yaathonrum ila

aakkam karuthi muthalilakkum seivinai
ookkaar arivutai yaar

thaelivi lathanaith thodangkaar ilivaennum
yaethappaadu anjsu pavar

vakaiyarach koolaa thaeluthal pakaivaraip
paaththip paduppatho raaru

seithakka alla seyakkedum seithakka
seiyaamai yaanung kedum

yennith thunika karumam thunindhthapin
yennuvam yenpathu ilukku

aatrrin varundhthaa varuththam palarninru
potrrinum poththup padum

nanraatrra lullundh thavurundu avaravar
panparindh thaatrraak katai

yellaatha yennich seyalvaendum thammodu
kollaatha kollaathu ulaku