Kural 464
குறள் 464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
thaelivi lathanaith thodangkaar ilivaennum
yaethappaadu anjsu pavar
Shuddhananda Bharati
They who scornful reproach fear
Commence no work not made clear.
GU Pope
Acting after due Consideration
A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.
Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered)and made clear to them.
Mu. Varadarajan
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
Parimelalagar
தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார்; இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்,
விளக்கம்:
[தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒரு தலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.]
Manakkudavar
(இதன் பொருள்) ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சி மாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்,
(என்றவாறு).