குறள் 465

தெரிந்துசெயல்வகை

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

vakaiyarach koolaa thaeluthal pakaivaraip
paaththip paduppatho raaru


Shuddhananda Bharati

Deliberation before action

Who marches without plans and ways
His field is sure to foster foes.


GU Pope

Acting after due Consideration

With plans not well matured to rise against your foe,
Is way to plant him out where he is sure to grow!

One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without havingthoroughly weighed his ability (to cope with its chances).


Mu. Varadarajan

செயலின்‌ வகைகளை எல்லாம்‌ முற்ற எண்ணாமல்‌ செய்யத்‌ தொடங்குதல்‌ பகைவரை வளரும்‌ பாத்தியில்‌ நிலைபெறச்‌ செய்வதொரு வழியாகும்‌.


Parimelalagar

வகை அறச் சூழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல்; பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.
விளக்கம்:
[அத்திறங்களாவன: வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான், முற்றுப் பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும். இழுக்கும் கூறப்பட்டன]


Manakkudavar

(இதன் பொருள்) மேற்சொன்ன வகையில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழு தல், பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி,
(என்றவாறு). இது பகைவாக்கு ஆக்க முண்டாமென்றது.