குறள் 462

தெரிந்துசெயல்வகை

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல

thaerindhtha inaththodu thaerndhthaennich seivaarkku
arumporul yaathonrum ila


Shuddhananda Bharati

Deliberation before action

Nothing is hard for him who acts
With worthy counsels weighing facts.


GU Pope

Acting after due Consideration

With chosen friends deliberate; next use the private thought;
Then act. By those who thus proceed all works with ease are wrought.

There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves,and thoroughly consider (the matter) with chosen friends.


Mu. Varadarajan

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன்‌ (செயலைப்பற்றி) நன்றாகத்‌ தேர்ந்து, தாமும்‌ எண்ணிப்‌ பார்த்துச்‌ செய்கின்றவர்க்கு அரிய பொருள்‌ ஒன்றும்‌ இல்லை.


Parimelalagar

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்கவல்ல அரசர்க்கு; அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.
விளக்கம்:
[ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்துபோந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.]


Manakkudavar

(இதன் பொருள்) அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரி களாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து, அதனைச் செய்யும் மாறு எண்ணிச் செய்ய வல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை,
(என்றவாறு).