Kural 461
குறள் 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
alivathooum aavathooum aaki valipayakkum
oothiyamum koolndhthu seyal
Shuddhananda Bharati
Weigh well output the loss and gain
And proper action ascertain.
GU Pope
Acting after due Consideration
Expenditure, return, and profit of the deed
In time to come; weigh these- than to the act proceed.
Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be hisultimate gain, and (then, let him) act.
Mu. Varadarajan
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Parimelalagar
அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும் ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும்; ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும்; சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க.
விளக்கம்:
[உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல், அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்].
Manakkudavar
தெரிந்து செயல் வகையாவது வினை செய்யுங்கால் அதனை எண்ணிச் செய்யவேண்டுமென்று கூறுதல். அறிவுடையவனாய்க், குற்றங் கடிந்து, மந்திரி புரோகிதரைத் துணையாகக் கொண்டு, சிற்றினஞ் சோரா தொழுகும் அரசனும் வினை செய்யுங்காலத்து முன்பே எண்ணிச் செய்ய வேண்டுதலின், அவையிற்றின் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும், அது செய்து முடித்தாலுள தாகும் பொருளும், ஆய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினை செய்ய வேண்டும்,
(என்றவாறு).