குறள் 460

சிற்றினஞ்சேராமை

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்

nallinaththi noongkundh thunaiyillai theeyinaththin
allatr paduppathooum il


Shuddhananda Bharati

Avoiding mean company

No help good company exeeds;
The bad to untold anguish leads.


GU Pope

Avoiding mean Associations

Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than thecompany of the wicked.


Mu. Varadarajan

நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.


Parimelalagar

நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை; தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
விளக்கம்:
(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை; தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை,
(என்றவாறு). இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.