குறள் 469

தெரிந்துசெயல்வகை

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

nanraatrra lullundh thavurundu avaravar
panparindh thaatrraak katai


Shuddhananda Bharati

Deliberation before action

Attune the deeds to habitude
Or ev'n good leads to evil feud.


GU Pope

Acting after due Consideration

Though well the work be done, yet one mistake is made,
To habitudes of various men when no regard is paid.

There are failures even in acting well, when it is done without knowing the various dispositions ofmen.


Mu. Varadarajan

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப்‌ பொருந்துமாறு செய்யாவிட்டால்‌ நன்மை செய்வதிலும்‌ தவறு உண்டாகும்‌.


Parimelalagar

நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர் மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம்; அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.
விளக்கம்:
[நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மைச் சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதவர்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.]


Manakkudavar

(இதன் பொருள்) நன்மையைச் செய்யுமிடத்திலும் குற்றமுண்டாம் ; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து, (எ - று ). இதுவுமோ ரெண்ணம்.