குறள் 470

தெரிந்துசெயல்வகை

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு

yellaatha yennich seyalvaendum thammodu
kollaatha kollaathu ulaku


Shuddhananda Bharati

Deliberation before action

Do deeds above reproachfulness
The world refutes uncomely mess.


GU Pope

Acting after due Consideration

Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.

Let aman reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, ofthings which do not become of his position to adopt.


Mu. Varadarajan

தம்‌ நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம்‌ ஏற்றுக்‌ கொள்ளாது. ஆகையால்‌ உலகம்‌ இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்‌...


Parimelalagar

தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினை முடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும்; எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.
விளக்கம்:
['தம்' என்பது ஆகு பெயர். தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உ ரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.]


Manakkudavar

(இதன் பொருள்) முடியுமாயினும், பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய் தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான், (எ-று) இது பிறராலிகழப்படாதன செய்ய வேண்டு மென்றது.