Kural 467
குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
yennith thunika karumam thunindhthapin
yennuvam yenpathu ilukku
Shuddhananda Bharati
Think and dare a proper deed
Dare and think is bad in need.
GU Pope
Acting after due Consideration
Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we'll think,' disgraced shall be.
Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," isfolly.
Mu. Varadarajan
(செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
Parimelalagar
கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான்.
விளக்கம்:
[துணிவு பற்றி நிகழ்தலின் 'துணிவு' எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'உபாயம்' என்பது அவாய்நிலையான் வந்தது. அது, கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத, தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய, ஏனைய மூவகைய; அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால் விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல் ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு' என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குக என்பதாம்.]
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிகத் துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப் பாமாதலான்,
(என்றவாறு).