நன்றியில்செல்வம்
Wealth without Benefaction 101
1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்
Who fills his house with ample store, enjoying none,
Is dead. Nought with the useless heap is done.
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோனால் அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as)dead, (for) there is nothing achieved (by him).
பரிமேலழகர் உரை
விளக்கம்:
(வைத்தான்' என்பது முற்றெச்சம். உண்ணுதல். அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி, அதன்கண் அவனாற் செம்யக் கிடந்ததோர் உரிமையில்லை யாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும். இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
நன்றியில் செல்வமாவது அறத்தையும் இன்பத்தையும் பயவாத செல்வத்தி னியல்பு கூறுதல். இது பண்பிலாதார்க் குள தாவதொன்றாதலின், அதன் பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) இடம் நிறைந்த பெரும் பொருளை யீட்டிவைத்தா னொருவன் அதனை நுகரானாயின், செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொரு பயன் பெறானென்றது.1002
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்ப
Who giving nought, opines from wealth all blessing springs,
Degraded birth that doting miser’s folly brings.
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கும் ஒன்றும் கொடுக்காமல் இறுகப் பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will beborn a demon.
பரிமேலழகர் உரை
பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம்.விளக்கம்:
(இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பொருளினாலே யெல்லாச் சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம்,(என்றவாறு). இது தீக்கதியுள் உய்க்குமென்றது.
1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
Who Lust to heap up wealth, but glory hold not dear,
It burthens earth when on the stage of being they appear.
சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.
பரிமேலழகர் உரை
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே.விளக்கம்:
(இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர், தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர்,(என்றவாறு). இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது.
1004
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?
பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
பரிமேலழகர் உரை
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?விளக்கம்:
(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின், அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லை என்பார், ' என் எண்ணுங்கொல்லோ'' என்றார். ஓகாரம் - அசை. இவை மூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யா தினை எண்ணுமோ?(என்றவாறு). இது புகழில்லையா மென்றது.
1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்
Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.
பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.
பரிமேலழகர் உரை
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை.விளக்கம்:
(இன்பத்தினும் அறம் சிறந்தமையின், கொடுத்தல் தொழில் முன்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பலகோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும், (எ-று).1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்
Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart.
தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.
பரிமேலழகர் உரை
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயினான்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய்.விளக்கம்:
(தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர். நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினையுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து,(என்றவாறு).
1007
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று
Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows.
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.
பரிமேலழகர் உரை
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைத் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து.விளக்கம்:
(நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி தனியளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒரு பயன் பெறாதென்றது.1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
When he whom no man loves exults in great prosperity,
‘Tis as when fruits in midmost of the town some poisonous tree.
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது.
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of atown.
பரிமேலழகர் உரை
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும்.விளக்கம்:
('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அன்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்ததன்மைத்து,(என்றவாறு). இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின், அவரைக் கொல்லுமென்றது.
1009
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
who love abandon, self-afflict, and virtue’s way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்த பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.
பரிமேலழகர் உரை
அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று - வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர்.விளக்கம்:
(பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி, அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர்,(என்றவாறு).
1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து
‘Tis as when rain cloud in the heaven grows day,
When generous wealthy man endures brief poverty.
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்கவல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).
பரிமேலழகர் உரை
சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து - உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து.விளக்கம்:
(துனி - வெறுப்பு; அதனைச் செய்தலால், துனி எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின், பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால் பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்பு படாமல் உரைப்பாரும் உளர். இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
(இதன் பொருள்) சீருடைய செல்வர் சிறுதுனியால் ஈயாதொழிதல், மாரி பெய் யாமை மிக்காற் போலும்,(என்றவாறு). மேற்கூறிய நன்றியில் செல்வ முடையான்றி நற்செல்வமுடையாரும் பிறர்க்கு ஈயாராயின், மழை பெய்யாதாயின் உலகம் துன்பமுறுமாறு போல அவர் துன்பமுறுவரென்றவாறு.
transliteration
vaiththaanvaai saanra paerumporul akhthunnaan
seththaan seyakkidandhthathu il
porulaanaam yellaamaenru eeyaathu ivarum
marulaanaam maanaap pirappa
eetdam ivari isaivaentaa aadavar
thotrram nilakkup porai
yechchamaenru yenyennung kollo oruvaraal
nachchap pataaa thavan
koduppathooum thuippathooum illaarkku adukkiya
koatiyun taayinum il
yaetham paerunjselvam thaanthuvvaan thakkaarkkonru
eethal iyalpilaa thaan
atrraarkkonru aatrraathaan selvam mikanalam
paetrraal thamiyalmooth thatrru
nachchap pataathavan selvam naduvoorul
nachsu marampaluth thatrru
anporeeith thatrsetrru aranokkaathu eettiya
onporul kolvaar pirar
seerutaich selvachiiruthuni maari varangkoorndh
varangkoorndh thanaiyathu utaiththu