குறள் 1005

நன்றியில்செல்வம்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்

koduppathooum thuippathooum illaarkku adukkiya
koatiyun taayinum il


Shuddhananda Bharati

Futile wealth

What is the good of crores they hoard
To give and enjoy whose heart is hard.


GU Pope

Wealth without Benefaction

Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.


Mu. Varadarajan

பிறர்க்குக்‌ கொடுத்து உதவுவதும்‌ தான்‌ நுகர்வதும்‌ இல்லாதவர்க்கு மேன்மேலும்‌ பெருகிய பல கோடிப்‌ பொருள்‌ உண்டானாலும்‌ பயன்‌ இல்லை.


Parimelalagar

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை.
விளக்கம்:
(இன்பத்தினும் அறம் சிறந்தமையின், கொடுத்தல் தொழில் முன்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பலகோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும், (எ-று).