குறள் 1006

நன்றியில்செல்வம்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்

yaetham paerunjselvam thaanthuvvaan thakkaarkkonru
eethal iyalpilaa thaan


Shuddhananda Bharati

Futile wealth

Great wealth unused for oneself nor
To worthy men is but a slur.


GU Pope

Wealth without Benefaction

Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart.

He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.


Mu. Varadarajan

தானும்‌ நுகராமல்‌ தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும்‌ இயல்பும்‌ இல்லாமல்‌ வாழ்கின்றவன்‌, தன்னிடமுள்ள பெருஞ்‌ செல்வத்திற்கு ஒரு நோய்‌ ஆவான்‌.


Parimelalagar

தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயினான்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய்.
விளக்கம்:
(தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர். நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினையுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து,
(என்றவாறு).