குறள் 1004

நன்றியில்செல்வம்

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்

yechchamaenru yenyennung kollo oruvaraal
nachchap pataaa thavan


Shuddhananda Bharati

Futile wealth

What legacy can he leave behind
Who is for approach too unkind.


GU Pope

Wealth without Benefaction

Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?

What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?


Mu. Varadarajan

பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால்‌ ஒருவராலும்‌ விரும்பப்படாதவன்‌, தான்‌ இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?


Parimelalagar

ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?
விளக்கம்:
(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின், அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லை என்பார், ' என் எண்ணுங்கொல்லோ'' என்றார். ஓகாரம் - அசை. இவை மூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யா தினை எண்ணுமோ?
(என்றவாறு). இது புகழில்லையா மென்றது.