குறள் 1003

நன்றியில்செல்வம்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

eetdam ivari isaivaentaa aadavar
thotrram nilakkup porai


Shuddhananda Bharati

Futile wealth

A burden he is to earth indeed
Who hoards without a worthy deed.


GU Pope

Wealth without Benefaction

Who Lust to heap up wealth, but glory hold not dear,
It burthens earth when on the stage of being they appear.

A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.


Mu. Varadarajan

சேர்த்து வைப்பதையே விரும்பிப்‌ பற்றுள்ளம்‌ கொண்டு புகழை விரும்பாத மக்கள்‌ பிறந்து வாழ்தல்‌ நிலத்திற்குப்‌ பாரமே ஆகும்‌.


Parimelalagar

ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே.
விளக்கம்:
(இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர், தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர்,
(என்றவாறு). இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது.