Kural 1008
குறள் 1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
nachchap pataathavan selvam naduvoorul
nachsu marampaluth thatrru
Shuddhananda Bharati
The idle wealth of unsought men
Is poison-fruit-tree amidst a town.
GU Pope
When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree.
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of atown.
Mu. Varadarajan
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது.
Parimelalagar
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும்.
விளக்கம்:
('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அன்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்ததன்மைத்து,
(என்றவாறு). இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின், அவரைக் கொல்லுமென்றது.