குறள் 1001

நன்றியில்செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

vaiththaanvaai saanra paerumporul akhthunnaan
seththaan seyakkidandhthathu il


Shuddhananda Bharati

Futile wealth

Dead is he with wealth in pile
Unenjoyed, it is futile.


GU Pope

Wealth without Benefaction

Who fills his house with ample store, enjoying none,
Is dead. Nought with the useless heap is done.

He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as)dead, (for) there is nothing achieved (by him).


Mu. Varadarajan

ஒருவன்‌ இடமெல்லாம்‌ நிறைந்த பெரும்‌ பொருளைச்‌ சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல்‌ இறந்துபோனால்‌ அவன்‌ அந்தப்‌ பொருளால்‌ செய்ய முடிந்தது ஒன்றுமில்லை


Parimelalagar


விளக்கம்:
(வைத்தான்' என்பது முற்றெச்சம். உண்ணுதல். அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி, அதன்கண் அவனாற் செம்யக் கிடந்ததோர் உரிமையில்லை யாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும். இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)


Manakkudavar

நன்றியில் செல்வமாவது அறத்தையும் இன்பத்தையும் பயவாத செல்வத்தி னியல்பு கூறுதல். இது பண்பிலாதார்க் குள தாவதொன்றாதலின், அதன் பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) இடம் நிறைந்த பெரும் பொருளை யீட்டிவைத்தா னொருவன் அதனை நுகரானாயின், செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொரு பயன் பெறானென்றது.