குறள் 1000

பண்புடைமை

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

panpilaan paetrra paerunjselvam nanpaal
kalandhtheemai yaalthirindh thatrru


Shuddhananda Bharati

Courtesy

The wealth heaped by the churlish base
Is pure milk soured by impure vase.


GU Pope

Courtesy

Like sweet milk soured because in filthy vessel poured,
Is ample wealth in churlish man's unopened coffers stored.

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.


Mu. Varadarajan

பண்பு இல்லாதவன்‌ பெற்ற பெரிய செல்வம்‌, வைத்த கலத்தின்‌ தீமையால்‌ நல்ல பால்‌ தன்‌ சுவை முதலியன கெட்டாற்‌ போன்றதாகும்‌.


Parimelalagar

பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற்போலும்.
விளக்கம்:
('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம் மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பண்பில்லாதவன் முன்னை நல்வினையா னெய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல், நல்ல வான் பால் ஏற்றகலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போலும், (எ-று).