திருவள்ளுவமாலை - கல்லாடர் - 9

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி

னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென

வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்

முப்பால் மொழிந்த மொழி


Thiruvalluva Maalai - Kalladar - 9

onrae porulaenin vaeraenpa vaeruyenin

anraenpa aaru chamayaththaar – nanruyena

yeppaa lavarum iyaipavae valluvanaar

muppaal molindhtha moli


கல்லாடர் - விளக்கம்

(பொ-ரை) அறுவகை மதத்தாரும் ஒருபொருளின் இயல்பை இன்னதென்று ஒருமதத்தார் கூறின், அதைமறுத்து வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும் , ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்னவற்றையோ உண்மையென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.


Freehand Translation*

‘This’ say some, ‘not this’ say others

‘Nope’ utter the six set of sects

-‘Good’ accept they all, the valluvan’s

threefold words spoken

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Kalladar, yet!

Of the six sects, one will condemn the system of the other; but none of them will condemn the system propounded by Valluvar in his Cural: it has the merit of harmonizing the opinions of them all, so that each sect would admit it to be its own.

Edward Jewitt Robinson (2001). Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from Their Writings. New Delhi: Asian Educational Services.


More from Wikisource

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி (௯)

ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின் நன்று என்ப ஆறு சமயத்தார் - நன்று என எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் பொழிந்த மொழி. (09)

‘கருத்துரை: உலகில் உள்ளவை ஆறு சமயங்கள். அவ்வறுவகை மதத்தினரும், பொருள் ஒன்று என ஒருவர் கூறினால், மற்றொருவர் அதனை மறுத்து, ஒன்று இல்லை வேறு என்று கூறுவார்கள். பிறிதொருவர் வேறு என்று கூறினால், இல்லை அதுவன்று என்பார்கள்! இவ்வாறு தாம் கூறும் கருத்தில் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நிற்பர் ஆறுவகைச்சமயத்தார். ஆனால், எவ்வகைச் சமயத்தாரும் வள்ளுவனார் முப்பாலில் மொழிந்தவற்றை, முரண்படாமல், நன்று என மனமிசைந்து ஒத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புடையது அருங்குறள் என்பதாம். அதாவது, அனைத்துச் சமயத்தினரும் ஏற்றுப் போற்றுவது திருக்குறள் என்பதாம்.