திருவள்ளுவமாலை - மாமூலனார் - 8

அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்

திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்

வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்

கொள்ளார் அறிவுடையார்


Thiruvalluva Maalai - Mamulanar - 8

aramporul inpamvee taennumandh naankin

thirandhtherindhthu seppiya thaevai – marandhthaeyum

valluvan yenpaan oarpaethai avanvaaichol

kollaar arivutaiyaar


மாமூலனார் - விளக்கம்

(பொ-ரை) அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை , மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.


Freehand Translation*

The essense of virtue, Porul(wealth), Inbam(Happiness), Veedu(Abode)

delivered he, the Divine - the deluded,

forgetfully even if, call him ‘just’ Valluvan

are resented by the wise.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Mamulanar, yet!

Valluvar is in reality a god; and if any shall say that he is a mere mortal, not only will the learned reject his saying, but take him for an ignorant man.


More from Wikisource

அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார். (08)

பதப்பிரிப்பு

    அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்நான்கின்
    திறம் தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
    வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன் வாய்ச்சொல்
    கொள்ளார் அறிவுடையார்

கருத்துரை: அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்த நான்கு உறுதிப்பொருள்களின் தன்மையைத் தெரிந்து தெளிவாகச் சொல்லியருளிய தெய்வத்தை, மறந்துபோயாகிலும் அவரை மனிதனாகக் கருதி, வள்ளுவன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவன் ஒரு பேதை (முட்டாள்) ஆவான். அறிவுடையார் அவன் கூற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். (வள்ளுவர் தெய்வப்பிறவி கீதை உரைத்த ‘கண்ணன்’ போன்று ஓர்அவதாரம்! மூடர்கள் வேண்டுமானால் அவரை ‘மனிதன்’ என்று பெயரிட்டு அழைக்கலாம் என்பது கருத்து.)