திருவள்ளுவமாலை - நக்கீரர் - 7

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா

லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க்

கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்

வாழியுல கென்னாற்று மற்று 


Thiruvalluva Maalai - Nakkeerar - 7

thaanae muluthunarndhthu thanthamilin vaenkuralaal

aanaa arammuthalaa andhnaankum – yaenorkku

oolin uraiththaatrkum onneer mukilukkum

vaaliulaku yenaatrrum matrru


நக்கீரர் - விளக்கம்

(பொ-ரை) தாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்யவல்லதாம் ?


Freehand Translation*

He realized and gave with soothing venbas,

‘the Four’ inclusive of virtue - Even for layman

‘The kural’; and the spectral clouds

showering rain; Hail thee both unparalleled.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Nakkeerar, yet!


More from Wikisource

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க் கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்று மற்று (07)

    தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
    ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு
    ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
    வாழிஉலகு என்ஆற்றும் மற்று

(தண்=குளிர்ச்சி; வெண்குறள்=குறள்வெண்பா; ஆனா=நீங்காத/விட்டுப் பிரியாத; நான்கு= அறம் பொருள் இன்பம் வீடு; ஏனோர்=அறியாத பிறர்; ஊழ்=முறை; ஒண்ணீர்= ஒள்ளிய நீரை; முகில்= மேகம்; என்ஆற்றும்= என்ன செய்யும், பிரதியுபகாரமாக.)

கருத்துரை: தாமே எல்லாவற்றையும் அறிந்து, குளிர்ந்த தமிழால் ஆன குறள் வெண்பாவினால் நீங்காத அறம் முதலான நான்கினையும்- அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினையும்- அதனை அறியாதார்க்கு முறையாக உரைத்த வள்ளுவப் பேராசானுக்கும், உயிர்காக்கும் நீரை மழையாகப் பொழியும் மேகத்திற்கும் இந்த உலகம் என்ன கைம்மாறினைச் செய்யமுடியும், எதுவும் செய்ய முடியாது. ஆகையால், அவரும் அம்மேகமும் இந்த உலகும் வாழ்க எனவாழ்த்தி வணங்குவோம்!