திருவள்ளுவமாலை - பரணர் - 6

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்

ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து


Thiruvalluva Maalai - Paranar - 6

maalum kuralaai valarndhthuirandu maanatiyaal

gnyaalam muluthum nayandhthalandhthaan – vaalarivin

valluvarum thamkuralvaen paavatiyaal vaiyaththaar

ulluvavellaam alandhthaar oarndhthu


பரணர் - விளக்கம்

(பொ-ரை ) திருமால் குறளாய்த் தோன்றித்தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.


Freehand Translation*

Growing into a dwarf Maal(Thirumaal) came; with two steps

measured the entire world - Knowledgeous

Valluvan with his two stanzas measured

the thoughts of the masses(upon research).

* note: the above translation will do no justice to the original thiruvalluva maalai work from Paranar, yet!

Māl (Vishnu) in his Cural (or dwarfish incarnation) measured the whole earth with his two expanded feet; but Valluvar has measured the thoughts of all mankind with his (stanza of) two short feet.


More from Wikisource

மூலம்

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவின் வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து (06)

பதப்பிரிப்பு

    மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
    ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால் அறிவின்
    வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
    உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து

கருத்துரை இப்பாடலில் வள்ளுவப்பெருமானைக் காக்குங்கடவுளாகிய திருமால் எனக்கூறுகின்றார் பரணர். திருமால் வாமனாவதாரத்தில், திரிவிக்கிரமாவதாரத்தில் குறளனாய்த் தோன்றிப் பின் வளர்ந்து தன்னுடைய திருவடிகள் இரண்டால், இந்த உலகம் எல்லாவற்றையும் அளந்தான். அதேபோல் வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால், தம் குறள்வெண்பா அடிகள் இரண்டைக்கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப் பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்; அதாவது அதுபற்றித்தெளிவான கருத்தை விளக்கமாகக் கூறியருளினார் என்பதாம்.

இங்கு வள்ளுவப்பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் என்றும், அவரை அவதாரம் என்றும் கூறுகின்றார்.