திருவள்ளுவமாலை - கபிலர் - 5

தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட

பனையளவு காட்டும் படிததான்- மனையளகு

வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி


Thiruvalluva Maalai - Kapilar - 5

thinaiyalavu pothaachiirupun neerneenda

panaiyalavu kaatdum patithathaan- manaiyalaku

vallaik kurangkum valanaada valluvanaar

vaellaik kuratpaa viri


கபிலர் - விளக்கம்

(பொ-ரை) வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.


Freehand Translation*

Just as the droplet on a blade of grass

houses the reflection of tall palm - Hey king, hailing from

kingdom where pet birds doze upon the maiden’s lullaby;

So is Valluvan’s Kural pa upon decompression

Implying that the mere two stanzas work the magic of holding greater truths

So fertile was the land and agriculture that the maids of the palaces and places used work in processing the crops and produce through manual methods using machinary like ulakkai which creates an unintermittent tune to which the household birds retire into slumber.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Kapilar, yet!


More from Wikisource

மூலம்

தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட பனையளவு காட்டும் படிததான்- மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (05)

பதப்பிரிப்பு

    தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
    பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
    வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
    வெள்ளைக் குறட்பா விரி (௫)

(அளகு= பறவை; வள்ளை= பெண்கள், நெல் குற்றும்போது பாடும் உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு; வெள்ளை- வெண்பா)

கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம் என்க.