திருவள்ளுவமாலை - உக்கிரப் பெருவழுதியார் - 4

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்

தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை

வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்

சிந்திக்க கேட்க செவி


Thiruvalluva Maalai - Ukkira Peruvaluthiyar - 4

naanmaraiyin meipporulai mupporulaa naanmukaththon

thaanmaraindhthu valluvanaaith thandhthuraiththa – noolmuraiyai

vandhthikka sennivaai vaalththukanal naenjcham

sindhthikka kaetka sevi


இறையனார் - விளக்கம்

(பொ-ரை) நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக; வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.


Freehand Translation*

‘Fourfaced One’ cloaking himself as Valluvan gave

the four vedas in under three Cantos - Let that thirukkural

Be Workshipped, praised through mouths, contemplated

with good minds and heard with ears

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Ukkira Peruvaluthiyar, yet!

The lord himself is saying what the best can the senses do; the reason to have the eyes, ears and mouth remains to be contemplating on thirukkural, for thirukkural is the essense of everthing.


More from Wikisource

மூலம்

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி (04)

பதப்பிரிப்பு

    நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
    தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
    வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
    சிந்திக்க கேட்க செவி

கருத்துரை இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார். நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும்.

The Four-faced (Brahma), disguising himself as Valluvar, has imparted the truths of the four Vēdas in the three parts of the Cural, which is therefore to be adored by the head, praised by the mouth, pondered by the mind, and heard by the ears. [Emphasis in original]