திருவள்ளுவமாலை - இறையனார் - 3

என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்

நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத   

செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்

மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் 


Thiruvalluva Maalai - Iraiyanar - 3

yenrum pularaa thiyaanarnaat sellukinum

ninralarndhthu thaenpilitrrum neermaiyathaaik- kunraatha

sendhthalirk katrpakaththin raeivath thirumalarponm

manpulavan valluvanvaaich sol


இறையனார் - விளக்கம்

(பொ-ரை.) திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந்தன்மையதான விண்ணக மலர்போலும்.


Freehand Translation*

Ever untainted, with fleeting time an

eternal superflous blossom - alike

unfallen flower from the tree of elixir

is poet valuvan’s words.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Iraiyanar, yet!


More from Wikisource

மூலம்

என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் (03)

பதப்பிரிப்பு

    என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும்
    நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
    செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
    மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்

கருத்துரை இறையனார் (சிவபெருமான்) கூறிய பாடல்.

இங்குத் தெய்வப்புலவரின் பாடலைக் கற்பகமரத்தின் தெய்வமலர் என்று அதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

கற்பகப்பூ என்றும் வாடாதது;அதுபோல் அவர் வாய்ச்சொல்லான திருக்குறளும் என்றும் வாடாதது,அதாவது புதியது, புத்தழகு உடையது.
நெடுங்காலம் சென்றாலும் கற்பகப்பூ தன்னழகு கெடாது நின்று மலர்ந்து தேன் சொரியும் தன்மையை உடையது. திருக்குறளும் காலத்தால் அழியாதது; தன்னழகு கெடாதது என்றும் பொருந்தும் கருத்துக்களை உடையது; இனிய சுவையான மருந்தனைய கருத்துக்களைத்தரும் தன்மைகொண்டது.
குறையில்லாத சிவந்த தளி்ர்களை(கொழுந்துகளை) உடையது கற்பகத்தரு (தரு=மரம்)அதுபோல் செஞ்சொற்களைக்கொண்டது திருக்குறள்.
கற்பகமலர் தெய்வத்திருமலர். திருக்குறளும் தெய்வத் திருக்குறள்.

மிகஅழகான ஒப்புமை.