திருவள்ளுவமாலை - நாமகள் - 2

நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்

பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை

எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்

வள்ளுவன் வாயதுஎன் வாக்கு


Thiruvalluva Maalai - Naamagal - 2

naataa muthalnaan marainaan mukannaavil

paataa itaippaa rathampakarndhthaen – kootaarai

yelliya vaenri ilangkilaivael maarapin

valluvan vaayathuyen vaakku


நாமகள் - விளக்கம்

(பொழிப்புரை) பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.


Freehand Translation*

Hey pandya ever victorious over foes; Before, I

manifested as Brahman mouthed Vedas

Then I came down as Bharatham

Here stand I, as Valluvan’s work

Pandya king is regarded as someone who could laugh at his foes strength - implying his prowess

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Naamagal, yet!


More from Wikisource

நாமகள் என்பது சரசுவதியைக்குறிக்கும். அந்த நாமகளே- சரசுவதியே- கல்விக்கடவுளே திருக்குறளின் சிறப்பை உரைக்கின்றாள்.

மூலம்

நாடா முதனான் மறைநான் முகனாவிற் பாடா விடைப்பார தம்பகர்ந்தேன்- கூடாரை யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு (02)

பதப்பிரிப்பு

    நாடா முதல் நான்மறை நான்முகன் நாவில்
    பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் - கூடாரை
    எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பின்
    வள்ளுவன் வாயது என் வாக்கு

கருத்துரை மாறனே(பாண்டிய மன்னனே) படைப்புக்கால முதலிலே நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்மறைகளை- நான்குவேதங்களை- பாடினேன். பின் இடைக்காலத்திலே பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழ்வேதமாகிய திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என்வாக்காக (வேதவாக்காக) உலகுக்கு நான் உரைத்தேன்.

இதுவே இறுதிவேதம் என்பதுகுறிப்பு; அதாவது இதுவே முழுமைபெற்ற வேதம் என்பதாம். முதல், இடை என்பதை நோக்குக.