திருவள்ளுவமாலை - சீத்தலைச் சாத்தனார் - 10

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்

மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்

தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ

பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்


Thiruvalluva Maalai - Chithalai Chathanar - 10

mummalaiyum mundhnaadum mundhnathiyum muppathiyum

mummurasum muththamilum mukkotiyum – mummaavum

thaamutaiya mannar thadamutimael thaaranno

paamuraithaer valluvarmup paal


சீத்தலைச் சாத்தனார் - விளக்கம்

(பொ-ரை) திருவள்ளுவரின் முப்பால் , மலை , நாடு ஆறு நகர் , முரசு, கொடி , குதிரை, தமிழ் ஆகியவற்றை மும்மூன்றாகக் கொண்ட மூவேந்தரின் முடிமாலை போல்வதாம்.


Freehand Translation*

3 Mountain Ranges 3 Countries 3 Rivers 3 capitals

3 Drums 3 Tamils 3 Flags - 3 Horses

Own they, the Kings; O’r their crown as a garland

is the poetry of The Valluvan’s Muppaal

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Chithalai Chathanar, yet!

3 Mountains = Kolli Hills (Cheran), Neri (Cholan), Podigai (Pandyas)

3 Countries = Cheran Country, Cholan Country, Paaniyan Country

3 Rivers = Amaravati (Cheran), Kaveri (Cholan), Vaigai (Paandiyan)

3 Capitals = Vanji (Cheran), Uraiyur (Cholan), Madurai (Paandiyan)

3 Drums = Aupecious, Victory, Charity

3 Tamils = Iyal(Literary), Isai(Music), Naadagam(Drama)

3 Flags = Bow (Cheran), Tiger (Cholas), Fish (Paandiyas)

3 Horses = Kanavattam (Chera); Puravi, Padalam (Chola); Pari, Koaram (Paandiya)

Chera Chola Paandiya

Thrukkural is also known as Muppaal


More from Wikisource

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந் தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால். (௰)

மும் மலையும் முந் நாடும் முந்நதியும் முப் பதியும் மும் முரசும் முத் தமிழும் முக் கொடியும் - மும் மாவும் தாம் உடைய மன்னர் தட முடி மேல் தார் அன்றோ பா முறை தேர் வள்ளுவர் முப் பால். (10)

கருத்துரை: சேர, சோழ, பாண்டியர்கள் மூன்று மலைகளைக் கொண்டவர்கள். (அவை சேரனுக்குக் கொல்லிமலையும், சோழனுக்கு நேரிமலையும், பாண்டியனுக்குப் பொதிகை மலையும் ஆம்) அவர்கள் முந்நாடு உடையவர்கள். (சேரனுக்குச்சேரநாடு சோழனுக்குச் சோணாடு, பாண்டியனுக்குப் பாண்டிநாடு) அவர்கள் மூன்று ஆறு உடையவர்கள்.(சேரனது ஆன்பொருநை, சோழனது காவிரி, பாண்டியனது வையை). அவர்கள் மூன்று தலைநகரங்கள் கொண்டவர்கள். சேரருக்குக் கருவூராம் வஞ்சி, சோழருக்கு உறையூர், பாண்டியருக்கு மதுரை) அவர்கள் மூன்று முரசுகளை உடையவர்கள்.(அவை மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு). அவர்கள் மூன்று தமிழ் உடையவர்கள். (அவை இயல் இசை நாடகம் என்பனவாம்.) அவர்கள் முக்கொடி உடையவர்கள் (சேரனுக்கு விற்கொடி, சோழனுக்குப் புலிக்கொடி, பாண்டியருக்கு மீன் கொடி). அவர்கள் மூன்று குதிரைகள் கொண்டவர்கள். (சேரனின் குதிரை, கனவட்டம், சோழனின் புரவி, பாடலம், பாண்டியர் பரி, கோரம் என்பனவாம்). இத்தகைய சிறப்புகளைக் கொண்ட(மும்மலை, முந்நாடு, முந்நதி, முப்பதி, மும்முரசு, முத்தமிழ், முக்கொடி, மும்மா) சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களின் பெருமை மிக்கமுடிமேல் அணிகின்ற மாலை எது தெரியுமா? அதுதான் மூன்று பால்களையுடைய(அறம், பொருள், காமம்) திருக்குறள் எனும் தமிழ்ப் பாமாலை என்கின்றார், மூன்றுமன்னர்களையும் நன்குஅறிந்த சீத்தலைச் சாத்தனார்.